பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாட தேவ நாயஞர் 695

களும் உலக நூல் வழக்காகிய அகப்பொருளொழுகலாறும் ஒருங்கமைந்து விளங்கும் கல்லாடச் செய்யுட்கள் சைவத் திருமுறையிற் சேர்த்து ஒதியுணரத்தக்க சிறப்புடையன என்பதை மறுத்தற்கில்லை. இறைவனது அருட் புகழை விரித்துரைக்கு மியல்பின வாகிய கல்லாடச் செய்யுட்களை முன்னேர் பதினுெராந் திருமுறையிற் கல்லாட தேவ நாயனர் பிரபந்தத்து டன் தொகுக்காது விட்டதனை நுணுகி நோக் குமிடத்துக் கல்லாட தேவ நாயனரும் கல்லாட நூலாசிரியரும் ஒருவரல்லரென்பதும், கன் லாட தேவ நாயனுர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் கல்லாட நூலாசிரி யரென்பதும் நன்கு புலம்ை. தொல்காப்பியத்திற்கு முதன் முதல் உரைகண்ட உரையாசிரியர் இளம் பூரண அடிகளே யென்பது எல்லோர்க்கும் ஒப்பமுடிந்த கொள் கையாகும். அங்ங்னமாதலின் தொல் காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரையெழுதிய கல்லாடரென்பார் இளம் பூரணர்க்குக் காலத்தாற் பிற்பட்டவரென்பது நன்கு துணியப்படும். பதினெராந் திருமுறையிற் கல்லாட தேவ நாயஞர்க்குப் பின் குறிக்கப்படும் கபிலதேவ நாயனுர் பாடல்களைத் தொல் காப்பியப் பொருளதிகார வுரையில் இளம் பூரணர் மேற்கோளாகக் காட்டுதலால், கபில தேவ நாயனரும் அவர்க்கு முன்னே குறிக்கப்பட்ட கல்லாட தேவ நாயனரும் இளம் பூரண அடிகளுக்குக் காலத்தால் முற் பட்டவராதல் வேண் டும். எனவே இளம் பூரணர்க்குக் காலத்தால் முற்பட்ட கல்லாட தேவ நாயருைம் அவ்வுரை யாசிரியர்க்குப்பின் சொல்லதிகாரத்திற்கு உரை வரைந்த கல்லாடரும் ஒருவரல்லர் என்பது நன்கு துணியப்படும்.

கல்லாடம் என்பது தமிழகத்திலுள்ளதோர் ஊர். சிவ பெருமான் கோயில் கொண்டருளுஞ் சிறப்புடைய திருத்தலங்களுள் கல்லாடம் என்னும் பெயருடைய திருத்தலமுமொன்றென்பது,

" கல்லாடத்துக் கலந்தினி தருளி

நல்லாளோடு நயப்புற வெய்தியும் ” (கீர்த்தித்திரு அகவல்) என வரும் திருவாசகத் தொடரால் இனிது விளங்கும். செங்கற்பட்டு சில்லா பொன்னேரி தாலுகா வைச் சேர்ந்த மீஞ்சூர் என்னும் ஊரிலுள்ள சோழகுல சுந்தரவிண்ணகர் எனும் பழம் பெயருடைய வரதராசப்பெருமாள் கோயிலில் வரையப்பட்ட கல்வெட்டு ஒன்றில் * கல்லாடிச்