பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724

பன்னிரு திருமுறை வரலாறு


அவர்களை வரவேற்று உபசரித்துக் குழந்தையளவு நிறை உள்ள பொன்னை க் கொடுத்துக் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். பொன்பெற்ற சிவசருமர் மனைவியுடன் திருவிடைமருதூரை யடைந்து இறைவனை வழிபட்டு வாழ்ந்திருந்தார்.

திருவெண்காடர் இடைமருதீசனருளாற் கிடைத்த குழந்தைக்கு மருதப்பிரான் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். பெற்ருேர் மகிழப் பல அற்புதங்களை நிகழ்த்திய மருதப்பிரான், வாணிகத்துறையில் வல்லவராய்ப் பெரும் பொருளிட்டித் தந்தையை மகிழ்வித்தார். அவர் ஒருமுறை வணிகர் சிலருடன் கடல்கடந்து வாணிகம் நடத்திய பொழுது கிடைத்த ஊதியத்தை எல்லாம் திருக்கோயிற் பணிக்கும் சிவனடியார்க்குஞ் செலவிட்டு எஞ்சிய பொருளுக்கு வரட்டியும் அவல் கடலையும் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பினர். வரும்வழியிற் கடல்நடுவே கப்பல் திசை மாறினமையால் அவருடன் வந்த வணிகர்கள் உணவுப் பொருளும் விறகுமின்றி வருந்தினர்கள். அவர்கள் விரும்பிய வண்ணம் கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு வரட்டிகளை அவர்களுக்குக் கடகைக் கொடுத் தார். எல்லோரும் ஊர்க்கு வந்துசேர்ந்தார்கள். உடன் வந்த வணிகர் சிலர் திருவெண்காடரை யடைந்து அவரு டைய மகன் மருதப்பிரானது செய்கையைக் கூறினர்கள். திருவெண்காடர் மருதப்பிரான் கொணர்ந்த வரட்டிகளு ளொன்றைச் சோதித்து அதனுள்ளே மாணிக்கமணி யிருத்தலைக் கண்டு வியந்தார். மருதப்பிரானைக் காண விரும்பித் தம்மாளிகையுட் சென்று எங்குந் தேடினர். அந் நிலையில் அவருடைய மனைவியார் எதிரே வந்து நம் புதல்வன் மருதப்பிரான் இப் பெட்டியைத் தங்களிடம் சேர்க்கும்படி சொல்லி வெளியே சென்ருன் என்று கூறிப் பெட்டியை அவரிடங் கொடுத்தார். திருவெண்காடர் பெட்டியைத் திறந்து பார்த்தார். அதனுள்ளே காதற்ற ஆசியும் ஒலைச் சுருளொன்றும் இருந்தன. காதற்ற ஆசி யும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற தொடர் ஒலையில் எழுதப்பட்டிருந்தது. அதனைப்படித்த திருவெண் காடர் இவ்வுலக நிலையாமையை நன்குணர்ந்தார். உணர்ந்த அப்பொழுதே துறவறத்தை மேற்கொண்டார். தம் தலைமைக் கணக்கராகிய சேந்தனுரை யழைத்துத்