பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/772

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756

பன்னிரு திருமுறை வரலாறு


எனச் சைவ சமய குரவர் நால்வரையும் பெருஞ்செல்வத்

தைத் துறந்த செம்மனச் செல்வராகிய சிவ வாக்கிய

தேவரையும் குறித்துப் போற்றிய அடிகள்,

  • வெள்ளை நீறு மெய்யிற் கண்டு

கள் ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ஓடும் பல்நரி யூளைகேட் டரனைப் பாடின வென்று படாம்பல வளித்தும் குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் றன் னை யேத்தின வென்று காசும் பொன் னுங் கலந்து தூவியும் வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை யெள்ளைத் தின் னக் கண்டு பிடித்தலும் அவன் இப் பிறப்புக்கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலே நுகர்ந்தும் மருத வட்டத் தொரு தனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்மித் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்தும் காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவர் '

எனச் சிவபத்திச் செல்வராகிய வரகுண தேவர் செய்த பேரன்பின் செயல்களை விரித்துரைத்துப் போற்றியுள்ளார். இங்குப் புகழ்ந்து போற்றப்பெற்ற பெரிய அன்பின் வர குணதேவராவார்

புயலோங் கலர் சடை யேற்றவன் சிற்றம்பலம் புகழும் மயலோங் கிருங்களியான வரகுணன்" எனவும்,

' வரகுணளுந் தென்னவன் ஏத்து சிற்றம் பலத்தான் ” எனவும் திருவாதவூரடிகளாற் போற்றப் பெற்ற முதல் வரகுண பாண்டியர் என்பது முன்னர் விளக்கப்பெற்றது.

திருவேகம்பமுடையார் திருவந்தாதி அந்தாதித் தொடையமைய நூறு பாடல்களைத் தன்

னகத்தே கொண்டு திகழும் இந்நூல், காஞ்சி நகரிலுள்ள திருவேகம்பம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய