பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் இவ்விரட்டைமணிமாலையின் 13-ம் ಆ-ಖTEು நம்பியாண்டார் நம்பி உய்த்துணரவைத்தமை நினைந்து போற்றத்தக்கதாகும். இப்பாடலில் சகுர்த்தனன் 575, திருமாலின் தோற்றமெனக் குடிமக்களாற் போற்றப் பெற்றவனும் இந்நூலாசிரியராகிய நம்பியாண்டார் நம்பியைப்போற்றித் தேவாரத்திருமுறையை யாண்டும் பரவச் செய்தவனுமாகிய சோழ மன்னனை யெனக் கொள்ளுதல் பொருந்தும்.

விநாயகர் திருவிரட்டை மணிமாலையாகிய இப்பனு வல் கபில தேவ நாயஞர் பாடிய மூத்த பிள்ளையார் திருவிரட்டை மணிமாலையை யடியொற்றி அமைந்த தாகும். நம்பியாண்டார்.நம்பி முதன் முதற்பாடிய என்னை நினைந்தடிமைகொண்டு ' என்ற வெண்பாவை முதற் பாடலாகக்கொண்டு இவ்விரட்டை மணிமாலை தொடுக்கப் பெற்றிருத்தலால், நம்பியாண்டார் நம்பி இளம் பருவத்தில் முதன் முதற் பாடிய செந்தமிழ்ப் பிரபந்தம் இதுவென்பது நன்கு பெறப்படும்.

சிவபெருமானிடமிருந்து தீஞ்சுவை மிக்கதொரு மாங்கனியைப் பரிசாகப் பெறுதற்பொருட்டு முருகப் பெருமானும் மூத்தபிள்ளையாராகிய விநாயகரும் உலகத்தை விரைவிற் சுற்றிவரும் போட்டியில் ஈடுபட்டனரென்பதும் அவருள் இளையபிள்ளையாராகிய முருகன் மயில் மீதமர்ந்து உலகத்தைச் சுற்றிவரச்செல்ல விநாயகர் உலகமே உருவாகிய சிவபெருமானை வலம்வந்து மாங்கனியை எளிதிற்பெற்று மகிழ்ந்தனரென்பதும் புராணவரலாருகும். இச்செய்தியினை,

கொம்பனைய வள்ளிகொழுநன் குறுகாமே வம்பனைய மாங்கனியை நாரையூர்-நம்பனையே தன்னவலஞ் செய்துகொளும் தாழ் தடக்கையாயென்ளுேட பின்ன வலஞ் செய்வதெனே பேசு. மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன றன் னைக் கணித ரவே வலஞ்செய்து கொண்ட மதகளிறே யுன்னே வாழ்த்துவனே .

என வரும் பாடல்களால் ஆசிரியர் உளமுருகிப்போற்றி யுள்ளார். இவ்வாறு இத்திருவிரட்டை மணிமாலையிலுள்ள திருப்பாடலைக் கூர்ந்து நோக்குங்கால் திருநாரையூர்ப்