பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/793

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி ភ្លុក្ខ

எனவும் இத்திருவந்தாதியில் ஆசிரியர் பாராட்டிப் போற்றி உள்ளார். கவுணியர் கோத்திரத்திலே தோன்றிச் சமணம் பெளத்தம் என்னும் புறச்சமயங்களை வசதில் வென்று செந் தமிழ்ப் பதிகங்களால் சிவநெறிபரப்பிய திருஞானசம்பந் தர்க்குக் கவுணியர் தீபன், பரசமயகோளரி, அருகாசனி, தமிழாகரன். தமிழ்விரகன், சைவசிகாமணி முதலிய சிறப்புப் பெயர்கள் இத்திருவந்தாதியில் வழங்கப்பெற்றுப9ளன.

சிவபெருமானேயன்றிப் பிறரெவரையுங் கருதாத ஒரு நெறிய மனமுடையார் திருஞானசம்பந்தப் பிள்ளே யா ராதலின் அவர் திருப்பாதங்களைப் பணிந்து போற்றும் அடியார்கள் இறைவனது திருவருளே எளிதிற் பெறு வார்கள் எனவும், திருஞானசம்பந்தர்பால் அளவிலாப் பேரன்புடையார் சிறுத்தொண்ட நாயனுராதலின் அவரைப் போற்றுவோர் திருஞான சம்பந்தர் திருவடித்துணையை எளிதிற்பெறுவர் எனவும், திருமாலும் நான்முகனுந் தேடிக் காணுதற்கரிய சிவபெருமானைத் தம் கண்களாற்கண்டு தந்தைக்குங்காட்டிய ஞானச்செம்மலாராகிய ஆளுடைய பிள்ளை யாரைச் செந் தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பரவுதற்குத் தாம் எத்துணையோ தவஞ் செய்திருத்தல் வேண்டும் எனவும், தமிழ்க்கடலாகிய ஞானசம்பந்தரை யன்றிப் பட்டத்து யானைமீது உலாவரும் பெருவேந்தசா யினும் பிறரெவரையும் தாம் பாடுவதில்லையெனவும் நம்பியாண் டார் நம்பிகள் இத்திருவந்தாதியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகவும் கிளவித்தலைவராகவும் கொண்டு பாடப் பெற்ற அகத்துறைச் செய்யுட்கள் இத் திருவந்தாதியில் இடம்பெற்றுள்ளன.

"புகழ் நிரம்பிய திருஞானசம்பந்தப் பெருமானை அடியேன் பரவிப்போற்றிய இச்செந்தமிழ்ப்பாடல்களைக் கற்றுவல்லவர்கள் பெறுதற்குரிய பேரின் பவுலகத்தையே தங்களுக்குத் தந்தருளும்படி திருமாலும் பிரமனும் சிவ பெருமான நன்னீரும் நறுமலருங்கொண்டு வழிபட்டு வேண்டிக்கொள்வார்கள்’ என் பார்,

சேரும்புகழ்த்திரு ஞானசம்பந்தளே பானுரைத்த பேருந்தமிழ்ப்பா இவைவல்லவர் பெற்ற இன்புலகம் க்ாருந் திருமிடற்ருய் அருளாயென்று கைதொழவர் நீருமலருங் கொளாநெடுமாலும் பிரமனுமே,