பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/841

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 827

வரும் சிறப்பின தாகிய தமிழ் மக்களது தெய்வங் கொள்கை யாகிய சிவநெறி உலகமெலாம் சிறந்து வளர வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளினைச் சோழ மன்னன் உள்ளத்தில் நிலைபெறச் செய்து அவனது இசைவுடன் தமது அமைச்சர் பதவியைத் துறந்து துறவற நெறியில் நின்றவர் சேக்கிழாரடிகள். ஆகவே இவ்விரு பெரு மக்களும் தமிழகம் வாழப் புலமைத் திருப்பணிபுரிந்த திருவருட் செல்வர்கள் எனப் போற்றத்தகும் பெருமை யுடையராவர். இவ்விருவரும் இயற்றியளித்த காப்பியங்கள் தாம் தோன்றும் பொழுதே தமிழில் முதல் நூலாகத் தோன்றிய தனிச் சிறப்புடையன. இந்நூல்களிற் கூறப் படும் வரலாற்று நிகழ்ச்சிகளும் வரலாற்றுக்குரிய மூலங் களும் தமிழ் மொழியோடும் தமிழ் நாட்டோடும் பிரிவின்றி நெருங்கிய தொடர்புடையனவாகும்.

கி. பி. இரண்டாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் சேரநாட்டை ஆட்சி புரிந்த இமயவரம்பன் என்னும் சேர மன்னனின் இளையமைந்தராய்ச், செங்குட்டுவன் என்னும் மன்னனுக்கு அன்பிற் சிறந்த தம்பியாய் விளங்கியவர் இளங்கோவடிகள், சிந்தை செல்லாச்சேணெடுந்துரத்து அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தராகிய அடிகள், " வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு ஆகிய தமிழகம் பிறநாட்டாரும் மதித்துப் போற்றும் முறையில் அரசியலாட்சியிலும் கலைத்துறைகளிலும் வீறுபெற்று விளங்கவும், தமிழ்வேந்தர் மூவரும் தம்முள் ஒற்றுமை யுணர்வுடன் திகழ்ந்து தமிழகத்தை வளம் பெற ஆட்சி புரியவும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்த்துறை களும் சிறந்து வளரவும் வேண்டித் தக்கதொரு பெருங் காப்பியத்தை இயற்றியளிக்கத் திருவுளங் கொண்டார் : தென்றமிழ்ப்பாவை செய்த தவக் கொழுந்து எனவும் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம் எனவும் போற்றத்தகும் சிறப்புடைய கண்ணகியாரைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு சிலப்பதிகாரம் என்னும் செந் தமிழ்க் காப்பியத்தை நவில் தொறும் சுவை நலம் பெருகும் வண்ணம் வனப்புற இயற்றியுதவிஞர். இளங்கோவடிகள் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றியவர் சேக்கிழாரடிகள். அருள் மொழித் தேவராகிய இவர், தமிழ் நாட்டின் அரசியல் நெறியும், அந்நெறியினை வரம்புற