பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/873

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 859.

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார் சூழ்ந்த பல்வே றிடத்த தத் தொன்னகர். (திருநகரச் - 11) எனவரும் செய்யுளில் ஆசிரியர் விரித்துக் கூறுவர். இச்செய்யுள்,

அருமணித்தடம் பூண்முலை யசம்பையரோ டருளிப்பாடியர் உரிமையிற் ருெழுவார் உருத்திர பல்கணத்தார் விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் காபாலிகள் தெருவினிற் பொலியுந் திருவாரூரம்மானே ' (4-20-3) எனவரும் அப்பர் தேவாரத்தை அடியொற்றியமைந்

துள்ளமை காணலாம்.

நிலமகட்குத் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி. மலர்மகட்குத் தாமரை போல் மலர்ந்து விளங்குவது திருவாரூர். என இவ்வாறு பன்னிரண்டு செய்யுட்களால் திருவாரூர்ச் சிறப்பினை விரித்துக்கூறிய ஆசிரியர், அந் நகரில் அரசு வீற்றிருந்த மனுச் சோழனது மாண்பினை நான்கு செய்யுட்களில் விரித்துரைக்கின்ருர்.

அன்ன தொன்னகருக்கு அரசாயிஞன் மனு வேந்தன் ; அவன் செங்கதிரோன் வழித்தோன்றினுன் : மன்னுசீர் அநபாயன் வழிமுதல் , மண்ணில் வாழ்தரும் மன்னுயிர்கட்கு எலாம் கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலன் ; விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள் எண்ணிலாதன இயற்றினன் ; செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன்பெயராக் கின்ை புற்றிடங் கொண்டவர் பூசனைக்கு ஆகமம் சொன்ன முறைமையால் அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான் ' எனத் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மனுச்சோழனது மாண்பினை ஆசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார்.

நாட்டின் ஒழுகலாற்றிற்கு இன்றியமையாத வேந்தனை உலகத்திற்கு உயிராகக் கூறுதல் பழைய தமிழ் மரபு. மன்னனுயிர்த்தே மலர் தலையுலகம் என்பது புற நானூற்றுத் தொடர். இறைவன் கண்ணுெளியும் ஆன்ம போதமும் போல உயிருடன் கலந்து நின்று நல்லனவும் தீயனவும் இவை யெனக்காட்டி நல்வழிப் படுத்துவது