பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/877

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 863

பான் ; இது யாது செய்தால் தீரும்’ என்பான் ; நிலை பெற்ற உயிர்களையெல்லாம் இடர்நீக்கிப் பாதுகாத்து அறத்தின் வழியிலே நிகழ்ந்த எனது அரசாட்சி மிகவும் நன்று என்பான் ; (பகவின் துயராகிய) இது என்ன செய்தால் தீரும் என்பான் ; தன்னுடைய இளங்கன்றினைக் காணுத தாய்ப்பசுவைப் பார்த்துச் சோர்வடைவான். இவ்வாறு அந்நிலையில் அரசன் உற்ற துன்பம் ஓர் எல்லை யுட்படாததாயிற்று.

மந்திரிகள், மன்னனது துயர மிகுதியைக் கண்ணுற்று மன்னனை வணங்கி, ‘அரசே! சிந்தை தளர்ந்து வருந்து வது இதற்குத் தீர்வாகாது. பசுவதை செய்தார்க்கு மறை நூலந்தணர்கள் விதித்த வழியே நின்மைந்தனை முறை செய்வது அறமாகும்’ என்றனர். அதுகேட்ட மனுச் சோழன், மந்திரிகளைப் பார்த்து, நீங்கள் மறைமுறைப் படி கழுவாய் தேடுதலே அறத்தொடுபட்ட வழக்கு என்று கூறுவீராயின், மறை விதிப்படி செய்யும் அக் கழுவாய் இளங்கன்றை இழந்து வருந்தும் பசுவின் துயரத்தைப் போக்குதற்குரிய மருந்தாகுமோ? நான் என் மைந்தனை இழக்க இருக்கின்றேன் என்ற நிலையில் நீங்கள் எல்லீரும் ஒன்று பட்டுரைத்த இப்பிழையுரைக்கு உடன்பட்டுத் தீர்வு காண்பேனுனல் அறக்கடவுள் என் செயல் குறித்து வெறுப்புருதோ? பெருநிலப்பரப்பினைக் காவல் புரியும் மன்னன் என்பவன், தன் ஆட்சிக்குட்பட்ட உயிர்களைக் காக்குங்கால், அவ்வுயிர்களுக்கு அரசனகிய தன்னலும் தன்னுடைய சுற்றத்தாராலும் குற்றம் மிக்க பகைவர்களா லும் கள் வர்களாலும் பிற உயிரினங்களாலும் உண்டாகும் ஐவகை அச்சங்களையும் போக்கி இடையூறு நீக்கி அறத்தின் வழியே காக்கும் கடமையுடையவன் அல்லளுே? அரசஞ. கிய யான், என் மைந்தன் செய்த கொலைக்குற்றத்திற்குக் கழுவாயாகப் பெரிய தவச்செயல்களைச் செய்ய உடன்பட்டு, எனது நாட்டில் அயலாைெருவன் ஒருயிரைக் கொன்ருல் அவனுக்குக் கொல்த் தண்டம் விதிப்பேயிைன், தொன்று தொட்டு நிலைபெற்று வந்த மனுவின் அறநெறி, மனு என்னும் பெயருடைய சோழனுல் அறவே அழிக்கப்பட்டது.

நிலையில் மந்திரிகளாகிய நீங்கள் வழக்கின் நிலையினை எனக்கு எடுத்துரைத்தீர்கள் என்று இகழ்ந்து கூறினன்.