பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 867

தேரா மன்ன செப்பு வதுடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சு சுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார் என்பதியே (சிலப் - வழக் - 50 - 56)

எனப் புறவின் துயர்களைந்த சிபிச்சோழனது அருளின் திறத்தையும், ஆவின்துயர் துடைத்த மனுச்சோழனது அரச நீதியினையும் அறிவுறுத்துவதாக இளங்கோவடிகள் குறித்துள்ளார். கறவை முறை செய்தோன் , கறவை முறை செய்த காவலன் (சிலப் - வாழ்த்துக் காதை - அம்மானைவரி) எனச் சிலப்பதிகாரத்திலும்,

சால மறைந்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக்

கறவைக்கன் றுணர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

முறைமைக்கு மூப்பிளமை யில் ' (93) எனப் பழமொழியிலும் கூறப்பெற்றுள்ள மனுச்சோழன் வரலாறு,

இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (547)

எனவரும் திருக்குறளுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது. வையகத்தையெல்லாம் அரசன் காக்கும்: அவன்றன்னை அவனது செங்கோலே காக்கும்; அதனை முட்டவந்துழியும் முட்டாமற் செலுத்துவஞயின். முட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்த்ான்கண்ணும் தன்கை குறைத்தான்கண்ணும் காண்க எனப் பரிமேலழகர் தரும் பொருள்விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

முறைவேண்டிளுேர் யாவரும் தமது குறையினை மணியடிப்பதன் மூலம் எளிதில் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டு அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டப் பெற்றிருத்தல் அக்காலத் தமிழ்வேந்தரது நீதிமுறை வழக்கமாகும். பாண்டியன் நெடுஞ்செழியன் மறை நாவோசையை யல்லது அல்லலுற்று முறை வேண்டினேர் அடிக்கும் இத்தகைய மணிநாவோசையை என்றும் கேட்ட தில்லை யென்பதுபட,