பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/962

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

946

பன்னிரு திருமுறை வரலாறு


யடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத் தோண்ட எண்ணினர். குளத்தில் தறிதட்டுக் கயிறு கட்டிக் கரை யிலும் தறிநட்டு அக் கயிற்றை வலிந்து கட்டி மண் வெட்டியுங் கூடையுங் கொண்டு குளத்திலிறங்கி மண்ணை வெட்டி யெடுத்துக் கயிற்றைப்பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினர். இவ்வாறு நாள்தோறும் தண்டி யடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொருது அவரையடைந்து மண்ணைத் தோண்டினல் சிற்றுயிர்கள் இறந்துபடும் வருத்தல் வேண்டாம் . என்றனர். அது கேட்ட தண்டியடிகளார் திருவில்லாத வர்களே, இந்தச் சிவத்தொண்டின் பெருமை உங்களுக்குத் தெரிய வருமோ என்ருர், அமணர்கள் அவரை நோக்கி, சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந் தனையோ என்று இகழ்ந்துரைத்தனர். அது கேட்ட தண்டியடிகள், மந்த உணர்வும் விழிக்குருடும் கேனாச் செவியும் உமக்கேயுள்ளன. சிவனுடைய திருவடிகளை யல்லால் வேறு காணேன் யான். அதனை அறிதற்கு நீர் யார் ? உங்கள் கண் குருடாகி என் கண்கள் உலகெல் லாம் காண யான் கண்டால் நீர் என் செய்வீர்?' என்ருச். அதனைக் கேட்ட சமணர்கள், ! நீ உன் தெய்வத்தருளால் கண் பெற்ருயாகில் யாங்கள் இவ்வூரில் இருக்க மாட் டோம் என்று சொல்லி அவர் கையிலுள்ள மண் வெட் டியைப் பறித்து, நட்ட தறிகளையும் பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகீள் ஆரூர்ப்பெருமான் திருமுன் சென்று, ‘ஐயனே! இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தி னேன். இவ் வருத்தத்தைத் தீர்த்தருளல்வேண்டும் என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்ருர். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, தண்டியே, நின் மனக்கவலை தவிர்க. நின்கண்கள் காணவும் அமணர் கண்கள் மறையுமாறும் செய்கின்ருேம்’ என்று அருள் செய்து, சோழ மன்னன்பால் கனவில் தோன்றி தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைத்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக என்று பணித்து மறைந்தருளினர்.

வேந்தன் விழித்தெழுந்து இறைவர் திருவருளைப் போற்றிப் பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை யடைந்து