பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ 30. சூரிய நமஸ்காரம் விளக்கம்: கிழக்கு நோக்கியிருந்து, சூரியன் உதிக்கும் அதிகாலை நேரத்தில் செய்த பயிற்சியின் காரணமாகவும், பயிற்சிகள் எல்லாம் பத்து அசைவு மூலமாக, எட்டு உறுப்புக்களை இயக்கும் வழியாக இருக்கும்போது சூரியனை வணங்கி ஆசிகள் பெறுவது போன்ற அமைப்பினைப் பெற்றிருப்பதாலும், இதற்கு சூரிய நமஸ்காரம் என்ற பெயர் அமைந்திருக்கிறது போலும். இதனை எட்டு உறுப்புத் தண்டால் என்றும் பத்து அசைவுள்ள ஆரோக்கிய வழி என்றும் பெரியோர்கள் கூறுகின்றார்கள். செயல் முறை: கண்கள் நேர் நோக்கிப் பார்த்திருக்க, வயிற்றை உள்ளுக்கிழுத்து, மார்பை மேலேற்றி முழங்கால் களை மடக்கி, உள்ளங்கைகளை ஒன்று சேர்த்து, கும்பிடும் நிலையில் நிற்க வேண்டும். அசைவு: 1. கட்டை விரல்கள் மார்புக்கு முன்புறமாகத் தொட்டுக் கொண்டிருக்க உள்ளங் கைகளைச் சேர்த்து, சற்று முதுகுப்புறமாக பின்புறம் முதுகை வளைத்து, (மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து) நிற்க வேண்டும்.