பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 1O7 காலத்தில், ஆசனத்தையும், சுவாசத்தையும் சரியாகச் செய்ய இயலாமற் போகும். அந்த நேரத்தில், சரியாகச் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும், கைகூடி வராது தொடர்ந்து செய்து பழகினால், எளிதாகவே வந்துவிடும். சுவாச முறையையும், பயிற்சியையும் பழுதறப் பழகிக் கொண்ட பிறகு, இயல்பாகவே வந்துவிடும் என்பதால், சூரிய நமஸ்கார அசைவு நிலைகளை மட்டும், குறைவறக் கற்றுக் கொண்டால் நலம் பயக்கும். பயன்கள்: இந்த ஆசனப் பயிற்சியால், தலை முதல் கால் வரை உள்ள எல்லா உறுப்புக்களுக்கும், வெளி உறுப்புகளுக்கும் சிறந்த பயிற்சி கிடைக்கிறது. இதனால், தசைநார்கள், நரம்புகள் உறுதி பெறுகின்றன. இரத்த ஓட்டம் விரைவு பெறுகின்றது. சுவாசம் பயிற்சியில் நிறைவு கிடைக்கிறது. நுரையீரல் வலிமையடைகின்றது. உள்ளுறுப்புக்கள் நலமடைகின்றன. இது சுகமான தேகநிலை பெற எளிய முறையில் அமைந்த இனிய பயிற்சியாகும். மிகக் குறைந்த நேரத்தில். நிறைந்த பயன் தரும் இந்தப் பயிற்சியை ஆண் பெண் அனைவரும், எந்த வயதினராக இருந்தாலும் செய்யலாம். 31. சக்ராசனம் பெயர் விளக்கம்: உடல் அமைப்பை சக்ரம்போல வளைத்து நிற்பதால், இதற்கு சக்ர ஆசனம் என்று பெயரிட்டிருக்கின்றனர். செயல்முறை: முதலில் மல்லாந்து படுக்கவும். பிறகு படுத்திருந்தபடியே, இடுப்பு வயிற்றுப் பகுதியை பின்புறமாகக் கொண்டு சென்று உள்ளங்கை தரையில் பட