பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஊன்றி, கால்களை விறைப்பாக வைத்து, வளைந்து நிற்கவும். (தெளிவாக அறிய படம் பார்க்க). இந்த ஆசனத்தைப் படுத்துக் கொண்டு ஆரம்பித்து செய்யலாம். நின்றுகொண்டு ஆரம்பித்தும் செய்யலாம். நின்ற நிலையி லிருந்தே, முழங்கால் பகுதியை வளைத்து, மெதுவாகப் பின்புற , LD IT 85 ഖങ്ങബ്ല. r இடுப்புப் பகுதியை தாழ்த்தி, கைகளை கொண்டு சென்று உள்ளங் கைகள் தரையில்பட, (தரை யில்) ஊன்றி நிற்கவும். குறிப்பு: அதிக வேகமாக இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. மெதுவாக, மிகவும் பொறுமையாகச் செய்யவும். திடீரென்று செய்வதால், வயிற்றுத் தசைகளும், முதுகுத் தசைகளும், பிடித்துக்கொள்ளும், சமயத்தில், மல்லாந்து விழுந்துவிட தலையில் அடிபடவும் நேரிடும். ஆகவே அவசர மில்லாமல் நிதானமாகச் செய்யவும். பயன்கள்: வளையும் தன்மையுள்ள இவ்வாசனத்தால், வயிற்றத் தசைகள் நன்கு வலிமையடைகின்றன. இடுப்புப் பகுதி இதமான பிடிப்புத் தன்மையைப் பெறுகிறது. வயிற்றுப் பகுதிக்கும் இடுப்புக்கும் இது நல்லதொரு பயிற்சியாகவே அமைகிறது. எண்ணிக்கை: 1. படுத்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல். 2. செயல்முறையில்கொடுத்திருப்பதுபோல வளைந்துநிற்கவும்.