பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா காலை தூக்கி, வலது கைக்குப் பக்கமாகக் கொண்டு வந்து, வலது கால் இருக்கும் இடம் நோக்கி விறைப்பாக நீட்டவும். இப்பொழுது வலது கை, இரண்டு கால்களுக்கும் நடுவில் இருக்கிறது. இரண்டு கால்களையும் படத்தில் கட்டியிருப்பதுபோல பின்னிக் கொள்ளவும். இரண்டு கைகளின் உள்ளங்கைகளும் தரையில் நன்றாகப் பதிந்திருக்கவேண்டும். உடலின் எடை முழுதும் இரண்டு உள்ளங்கைகளின் மீதுதான் இருக்க வேண்டும். அடுத்து, கால்களை மேலே உயர்த்த வேண்டும். பிறகு, மெதுவாக இறக்கி, தரையில் கால்களை வைக்கவும். பிறகு, இடதுகை, கால்களுக்கு நடுவில் இருப்பதுபோல் வைத்து, இந்த ஆசன தை முன்போலவே தொடர வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும். பயன்கள்: கைகள் உடல் எடை முழுதும் தாங்கிக் கொள்ளும் சக்தியினால், நிறைந்த ஆற்றலைப் பெறுகின்றன. உடல் சமநிலையை நிறைவாக நடைமுறையில் பெற முடிகிறது. எண்ணிக்கை முறை: . 1. வஜ்ராசன அமைப்பில் அமர்ந்து கைகளை முன்புறமாக வைக்கவும். 2. படத்தில் காட்டியிருப்பது போல, கைகளையும் கால்களையும் நீட்டி வைத்திருக்கவும். 3. கைகளை ஊன்றி, கால்களை உயர்த்தவும். 4. கால்களை இறக்கி வைக்கவும்.