பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யன்தரும் யோகாசனங்கள் 111 நன்றாக வாழ்வோம் நல்லபசி, நலமான சீரான சக்தி, நிம்மதியான தூக்கம், உள்ளுறுப்புக்களின் ஒழுங்கு நிறைந்த உற்சாகமான பணிகள். சீரிய நாடித்துடிப்பு, தேகத்திற்குத் தேவையான வெப்பநிலை, காலத்தே கழிவுப் பொருட்களை வெளியேற்றி விடுகின்ற வளமான உடலமைப்பு, தன் கடமையை உண்மையோடு செய்கின்ற உற்சாகநிலை, உடல்நிலை; மகிழ்ச்சிகரமான நிலை. மேற்கூறியவைகளெல்லாம் சிறந்த உடல் நலத்தோடு ஒருவர் வாழ்கிறார் என்பதற்கு சான்று பகரும் தன்மைகளாகும் நீங்களும் இத்தகைய உடல் நலத்தோடு வாழ வேண்டாமா? உடல் நலமும், வளமும், நேர்மைத் திறமும் அமைதி தவழும் அறிவும் தெளிவும், ஒவ்வொருவருடைய பிறப்புரிமையாகும். நோயும், நலிவும், பயமும், துயரும், அமைதியின்மையும் அறியாமையும் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, வாழ்வாங்கு வாழ வாழும் வழியை மேற் கொண்டு நலமோடு நாம் வாழ்வோமாக.