பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒன்றோடொன்று ஒருங்கிணைத்து, ஒற்றுமையாகச் செயல் படுத்தும் வகையில் இணைக்கும் பாலமாக, ஏற்றதொரு இனிய பாதையாக அமைந்திருக்கிறது என்றே நாம் அறிந்து காள்ளலாம். மூன்றுவகை மனிதர்கள் உருவத்தால் மனிதன், உணர்வால் அலைக்கழிக்கப் படும் மனிதன், அறிவார்ந்த மனிதன் என்று மனிதர்களைப் பகுப்பார்கள் அறிஞர்கள். அத்தகைய மனிதர்களை பூரண மனிதர்களாக மாற்றும் பெருமுயற்சியினை மேற்கொண்டிருக் கிறது என்பதாக யோகத்தின் உயர்ந்த குறிக்கோளினைச் சுட்டிக் காட்டுவார்கள். வலிவான உடலும், தெளிவான கட்டுப்பாட்டுடன் இயங்குகின்ற மனமும் உடையவன் பரிபூரண மனிதன் என்ற தத்துவத்திற்கு இலக்கியமாக, யோக முறைகள் அமைந்திருக்கின்றன. உதவுகின்றன. நமது தேகத்தைப் பற்றிக் கூறும்போது சம்சார சாகரத்தை சாமர்த்தியமாகக் கடக்க உதவும் கப்பல்; நமது இலட்சியப் பயணத்தினை நாம் அடைவதற்காக, நம்மைத் தூக்கிச் சுமக்கும் குதிரை: இறைவன் வாழும் நடமாடும் கோயில் என்றெல்லாம் யோகியர் புகழ்ந்துரைக்கின்றனர். அத்தகைய புனிதமான தேகத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும்; நோயனுகா வகைகளை நுணுகி ஆய்ந்து கூறி நெறிப்படுத்தவும்; வேண்டிய யோக முறைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும்போது, நமது உடலைப் பற்றி யோக முறைகள், எவ்வாறெல்லாம் தெளிவுறக் கூறுகின்றன என்று அறியும்போது, நம்மால் வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை!