பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 4. யோக முறை உடற்பயிற்சியின் நோக்கம் மனிதனை ஒரு கூடிவாழும் மிருகம், என்கிறது சமூக அறிவியல் நூல்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு வாசகம் கூறுகிறது மனிதன் ஒரு மர்மமான பிராணி என்று, அதாவது அவனைப் பற்றி அறிந்து கொள்வதே மிகவும் கடினம் எனறு. எண்ணும் நினைவுகள், எரிதழல் போன்ற உணர்வுகள், அலைக்கழிக்கும் ஆசைகள், நிழலாடும் லட்சியங்கள், நின்று நினைவுறுத்தும் மனசாட்சிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று அவைகளுக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கும் பூமியாகத்தான், ஒரு மனித உடல் விளங்குகிறது. ஆசைகள், போட்டிகள், தோல்விகள், அவ்வப்போது, கிடைக்கும் சிறு சிறு வெற்றிகள், இனம் புரியாத கவலைகள் இவைகளுக்கிடையே ஒரு மனிதன், போராடிப் போராடி மீள முடியாமல் கிடக்கும்போது, அதிலிருந்து மீண்டு வெளிவருவதற்கு, ஆணித்தரமாக ஆணையிடும் ஒரு மாபெரும் சக்தி (Will Power) நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. அத்தகைய கட்டுப்படுத்தும் மாபெரும் சக்தியுடன் ஒருவன் வாழ வேண்டும் என்றால், அவன் சிறந்த உடல் சிறந்த உடல் நலம் உள்ளவனாகத் திகழ்ந்தால் தான் முடியும். அந்த அரிய சக்தியின் மூலமேதான், கம்பீரம், வீரம்,