பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை தருதல். 6. மனதாலும் செயலாலும் உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுதல். இவ்வாறு தேக நலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நினைந்து நினைந்து செயல்படுகின்றன. நிற்கும்போது கம்பீரம், நடக்கும்போது பெருமிதம்; உட்காரும்போது செம்மாந்த நிலை, இப்படி ஒவ்வொரு அங்க அசைவிலும் தன்னம்பிக்கையை வளர்த்து, தன்னிறைவை மிகுதிப்படுத்தி, தங்கநிகர் வாழ்வுக்குச் சொந்தக்காரனாக்கு கின்ற தனிப்பெரும் தகுதியை, ஆசனங்கள் தந்து, அருமையான வாழ்வு தந்து, வழி நடத்திச் செல்கின்றன.