பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 25 பயிற்சிகள் இந்த ஹடயோகத்தில் அமைந்திருக்கின்றன என்றும் கூறுகின்றார்கள். இந்த ஹடயோகப் பயிற்சி முறைகளினால் உடல் உறுப்புக்களில் நளினமும், ஒருவிதலயமான இயக்கங்களும் விளைகின்றன. உணர்வுகளில் எழுச்சியும் தளர்ச்சியும் இல்லாத சமநிலையும் பிறக்கின்றது. உடல் இயக்கத்தினால் மன இயக்கம் சிறந்து, ஒரு நிர்மலமான மனோ நிலையும் உண்டாகிறது. இத்தகைய ஹடயோகப் பயிற்சிகளை இரண்டு முறையாகக் கற்கலாம் என்கிறார்கள். யோகமுறைப் பயிற்சி தரும் குருவிடம், அவருடனே கூடத் தங்கியிருந்து பயில்கின்ற மாணவர்களுடன் சேர்ந்து, அவர் காட்டுகின்ற வழிகளில், மிகுந்த நியமத்துடன் கற்றுக் கொள்கின்ற குருகுலக் கல்வி முறை ஒன்று. குரு என்றால் யார்? குரு என்பது சமஸ்கிருதச் சொல். கு என்றால் இருட்டு. ரு என்றால் வெளிச்சம். அறியாமை இருட்டிலிருந்து அறிவான வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்தான் குரு ஆவார். தற்போதைய கல்வி முறைப்படி, குருவிடம் ஒரு மணி நேரம் என்ற நேர அளவுடன் சென்று, கற்றுக்கொண்டு திரும்பி வருகின்ற பள்ளிமுறை ஒன்று. இத்தகைய ஹடயோகப் பயிற்சிகளின் முக்கியமான நோக்கத்தையும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வது நலம் பயக்கும்.