பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1. உடல் நலத்தைப் பெரிதும் வளர்த்து, உடலை பரிபக்குவமாக உருவாக்கித் தருதல். 2. உடலுக்குத் தேவையான எடை அதாவது அதிகக் கனமிகுந்த தடியாகவோ அல்லது ஒல்லியாகவோ இல்லாமல், ஒரு நல்ல அமைப்பினை அமைத்துத் தருதல். 3. உடலின் உள்ளே பெருகிவரும் சக்தியினை நல்வழிப்படுத்தி, அந்தச் சக்தியின் மூலமாக தேகத்திற்கு சிறந்த வழியில் பயனாற்ற வைத்தல். 4. மூச்சிழுக்கும் முறையின் (Breathing) முக்கியத் துவத்தை உணர்த்தி, ஓய்வு கொள்வதற்கேற்ற உண்மை நிலையைக் காட்டுதல். 5. மனப் போராட்டங்களைத் தீர்த்துவைத்து ஆசைகளைக் கட்டுப்படுத்தும் மனவலிமையை உண்டாக்கி, அறிவு, ஆனந்தம், பேரின்பம் என்ற இன்ப நிலையில் வாழத் தூண்டுகின்ற வகையிலே தான். இந்த ஹடயோகத்தின் ஆசனப் பயிற்சிகள் அமைந்திருக் கின்றன என்று ஆசன வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு ஒருவர்ை அழைத்துச் செல்லுகிற அதாவது அறியாமை இருட்டிலிருந்து அறிவு என்கிற வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்க நல்லவர், வல்லவர்தான், குரு என்று அழைக்கப்படுகிறார்.