பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 27 யோகமுறையின் பிரிவுகளை முதலில் கண்டோம், அந்த யோகமுறைப் பயிற்சிகள் யாவும் மேலும் எட்டு நிலையாகப் பிரித்து, உடலில் வளத்தையும், வாழ்வுக்கு வேண்டிய தரும நெறிகளையும் போதிக்கின்றது. அவை போதிக்கும் முறைகளுக்கேற்ற பிரிவுகளாவன. 1. இயமம் 2. நியமம் 3. ஆசனம் 4. பிராணாயாமம். 5.பிரத்யாகாரம் 6. தரணம் 7. தியானம் 8. சமாதி. ஆசனம் செய்வதற்கு முன், இயமம் நியமத்துடன் இருக்க வேண்டும் என்று பலர் பேச நாம் கேட்டிருக்கிறோம். அத்தகைய இயமம் நியமம் என்னவென்று சுருக்கமாகத் தெரிந்துகொண்டு, மூன்றாவது பிரிவான ஆசனம், நான்காவதாக உள்ள பிராணாயாமம் என்பனவற்றினை மட்டும் நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம், மற்ற அமைப்புக்கள் நமக்கு தற்பொழுது தேவையில்லை என்பதால், இங்கு கூறவில்லை. இயமம் என்பது ஐந்து வகை ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தருகிறது. பிறருக்குத் தீங்கு செய்யாமை அகிம்சை உண்மையே பேசுதல் சத்தியம் பிறர்பொருளைக் களவாடாமை அஸ்தேயம் புலன்களைக் கட்டியாளுதல் பிரம்மசாரியம் பிறர் பொருள்மீது ஆசை கொள்ளாமை அபரிக்ரஹம்