பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நியமம் என்பது ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. உள்ளும் புறமும் தூய்மையாக வைத்துக் கொண்டு இருக்கக் கூடிய தூயநிலை லெளசம் நிர்மலமான மன அமைதியுடன் வாழக்கூடிய மகிழ்ச்சி கரமான நிலை பெறுதல் சந்தோஷம் தவத்துக்குரிய தான-தரும காரியங்களைக் கற்றுத்தரும் ஒழுங்கு முறைகள் தபஸ் அகக் காட்சி மூலம் சுய ஞானத்தை உருவாக்குதல் எல்வாத்யாயம் உயர்ந்த உள்ளறிவின் மூலம் பெறுகின்ற மனக் கட்டளைக்கேற்ப உடனுக்குடன் பணிதல் பிரணிதானம் இனி, இவற்றை கற்றுக்கொண்டு, வளர்த்துக்கொண்டு வாழ்வாங்கு வாழ, உதவும் ஆசனங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆசனம் என்றால் என்ன? ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தெளிந்து ஒழுகுதற்கேற்ற தன்மையை ஆசனத்தின் மூலம் அடையலாம் என்பது ஆன்றோர்களின் கருத்தாகும். அத்தகைய அரிய பயிற்சியை அளிக்கும் ஆசனம் என்றால் இருக்கை (Pose) என்ற பொருளில் விரவி நிற்கிறது. உடல் உறுப்புக்களை உரிய முறையில் மடக்கி, ஒரு நிலையில் கொண்டுவந்து அமர்ந்து அதன் மூலம் மனத்தினைக் கட்டுப்படுத்தும் இருப்பு நிலைதான் ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. ஆசனப் பயிற்சிகள் குழந்தைகளுக்கு, இளைஞர் களுக்கு, முதியவர்களுக்கு, மற்றும் நலிந்தவர்கள், நலமாக