பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தியானத்திற்கு என்று (Meditation) ஒருவகை. அவைகளில் மிக முக்கியமானவைகள் பத்மாசனம், சித்தாசனம், ஸ்வஸ் திகாசனம், சுகாசனம் ஆகும். இவைகளில் ஏதாவது ஒரு ஆசன இருக்கையில் அமர்ந்து யோகிகள் தமது தியானத்தினைத் தொடங்குவார்கள். மற்றொன்று, உடல் நலத்திற்கும் பலத்திற்குமான இருக்கைகள். நமக்குத் தேவை உடல்நலமும் பலமும் தானே. அத்தகைய 31 ஆசனங்களைப் பற்றித்தான். பின்னால் வரும் பகுதிகளில் விரிவாகப் படத்துடன் விளக்கியிருக்கிறோம். (இயக்கம் பகுதியைக் காணவும்) அதற்குமுன், ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்களைத் தெரிந்துகொள்வோம்.