பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - 9. மூளைக்குப் போதிய பிராணவாயு கிடைக்கா விட்டால், படபடப்பும், பதைபதைப்பும், உணர்வு எழுச்சியும் (Tension) உண்டாவதோடு, உடல் அமைப்பையும் மாற்றி, செயல்களையும் சின்னாபின்னப் படுத்துவதுடன், நோயுள்ளவராகவும் ஆக்கிவிடுகிறது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலாசாலையைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் பேன் கிராப்ட் (Dr. Joseph Pancraft) 6T6&TL6Asir. - பிராணவாயுவின் பெருமையைப் பற்றி டாக்டர் இப்படி இக்காலத்தில் கூறுவதை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பிராணாயாமம் என்கிற முறையில் கூறியிருக்கின்றனர் நமது மூதாதையர்கள். உடலுக்குள்ளே பிராணவாயு என்கிற உயிர்க் காற்றைச் சேர்த்து வைத்து, பேராண்மைமிக்க சக்தியினைப் பெருக்கும் வழிதான் பிராணாயாமம் என்றனர். இனி, பிராணாயாமம் என்ற உயர்ந்த மூச்சிழுக்கும் முறையினைப் பற்றியும், அதன் இயல்பும் ஏற்றமும் பற்றியும் தெரிந்து கொள்வோம்.