பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 37 அந்த ஆக்கபூர்வமான அகிலத்தைக் காக்கின்ற சக்தியைத்தான் யோகிகள் பிராணன் (Prana) என்ற பெயரிட்டு அழைத்தனர். இந்தப் பிராண சக்திதான், பிரபஞ்சத்தின் பிரதான சக்தியாக விளக்கி நிற்கிறது. எறும்பிலிருந்து யானை வரை ஒற்றைச் செல் அமீபாவிலிருந்து உயர்படைப்பான மனிதன் வரை, தாவர இனத்திலிருந்து மிருக இனம் வ,ை எல்லா இனங்களிலும் நீக்கமற நிறைந்து பரவிக் கடக்கின்ற பலமிக்க சக்தி இதுதான். இந்த அரிய சக்தியால்தான் கன் து கேட்கிறது. நாக்கு சுவைக்கிறது. தோல் உணர்கிறது, மூக்கு நுகர்கிறது மூளை வேலை செய்கிறது. தீ எரிகிறது. ஆறு ஓடுகிறது. விமானம் பறக்கிறது. வானொலி பெட்டி பாடுகிறது. இந்தப் பிரானசக்தியே, இதயத்திலிருந்து இரத்தத்தை இறைத்து, இரத்தக் குழாய்கள் மூலம் உடல் உறுப்புக்களுக்குக் கொடுக்கிறது. இதே சக்திதான் உணவு ஜீரணத்திற்கும், ஊறும் அமிலங்களுக்கும், உதவாதவைகளை வெளியேற்ற வும் பயன்படுகிறது. இந்தப் பிரான சக்தியே நமது நினைவாக, ஆசையாக செயலாக, அசைவாக, பேச்சாக, எழுத்தாகப் பரிணமித்து நிற்கிறது. நல்ல வலுவுள்ள மனிதன் என்றால், அவனுள்ளே பிராண சக்தி நிறைந்துகிடக்கிறது என்று இப்பொழுது நம்மால் கூறமுடியும். ஆகவே உணவு நீர் இவற்றின் மூலம் ஒருவன் பெறும் பிராண சக்தியைவிட, (காற்றின் சுவாசத்தின் மூலமே நிறைய பெற முடிகிறது).