பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ பயன்தரும் யோகாசனங்கள் 39 சுவாசத்தில் நான்கு நிலைகள் உண்டு முதல் நிலை 1 மூச்சை உள்ளுக்கு இழுத்தல் (Breat in) நான்கு எண்ணிக்கை (மனதுக்குள்ளே எண்ணுதல்) வரை. 2. மூச்சை உள்ளுக்குள்ளே அடக்கி வைத்திருத்தல் (Hold in) பிறகு, நான்கு எண்ணிக்கை மனதுள் எண்ணிக்கொண்டே மூச்சை உள்ளே வைத்திருத்தல். ஒவ்வொரு முறையும் ஆழ்ந்த சுவாசத்தை (Deep Breathing) மேற்கொள்ள வேண்டும். இதனையே 6 எண்ணிக்கை, 8 எண்ணிக்கை என்று செய்யலாம். (6x6), (8X8) இரண்டாம் நிலை: இது பிராணாயாமத்தைக் கொஞ்சம் பழகிய பிறகு செய்யும் நிலை. 1. 6 எண்ணிக்கை வரை மூச்சை உள்ளே இழுத்தல், 2. அதே 8 எண்ணிக்கை வரை மூச்சை உள்ளேயே வைத்திருத்தல். 3. அதே 6 எண்ணிக்கை வரை மூச்சை சீராக வெளியே விடுதல். இதனை 6x6x6 என்பர். 8x8x8 என்றும் செய்யலாம். மூன்றாம் நிலை: 1. 6 எண்ணிக்கை வரை மூச்சை உள்ளே இழுத்தல். 2. 6 எண்ணிக்கை அளவு மூச்சை வெளியே விடுதல். 3. பிறகு, 6 எண்ணிக்கை வரை, மூச்சை இழுக்காமல் அப்படியே இருத்தல். இதனை 6x6x6 என்றும், 8x8x8 என்றும் செய்யலாம்.