பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இரத்தத்துடன் கலந்து சக்தியினை உண்டாக்கும் (Oxygenation) ஆற்றலையும் பெற்றுவிடுகிறது. நாம் செய்யப் போகின்ற ஆசனப் பயிற்சிகள் அனைத்துக்கும் ஆழ்ந்த சுவாசம் சற்று அதிகமாகவே வேண்டும். இவ்வாறு செய்வதால், மார்பு விரிவடைகிறது. நுரையீரல்கள் விரிவடைந்து நிறைய காற்றைப் பெறும் தகுதியையும் வலிமையையும் பெறுகின்றன. கட்டுப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் மாபெரும் சக்தியும் (Will power) உண்டாகி விடுகிறது. எனவே ஆழ்ந்த சுவாசத்தின்போது ஒன்றை மட்டும் முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே மூச்சினை இழுக்கும் போது பிராண சக்தியை நிறைய சேர்த்து வைத்துக் கொள்கிறோம் என்ற நினைவுடன் ஆழ்ந்து சுவாசியுங்கள். காற்றை வெளியே விடும் பொழுது தூய்மையற்ற கசடுகளையும் களைப்பையும், உணர்ச்சியும் எரிச்சலையும் ஊட்டுகின்ற நிலைகளையெல்லாம் வெளியேற்றி விடுகின்றோம் என்று மூச்சினை வெளியேற்றுங்கள். பிராண சக்தியின் அளவைப் பெருக்கும் பணியில் செல்லுங்கள். அதன் வழியே அயராமல் நில்லுங்கள். அரிய சுகத்தையும் ஆன்ற வலிமையையும் நிச்சயம் பெறலாம்.