பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (ಡಹEಹ) யோகாசனங்களின் இயல்கள் பற்றியும், எழிலார்ந்த அமைப்பினை பற்றியும், பிராணாயாமத்தின் பெருமையைப் பற்றியும் இதுவரை அறிந்து கொண்டோம். இனி, நமக்குத் தேவையான ஆசனங்களை நான்கு வகையாகப் பிரித்து, ஒவ்வொன்றையும், எண்ணிக்கை முறையில் எவ்வாறு செய்து பழகுவது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். முதலில், ஆசனம் பற்றிய பெயர் விளக்கத்தையும், அடுத்து - செய்கின்ற செயல் முறையையும், பிறகு அந்த குறிப்பிட்ட ஆசனத்தின் மூலம் பெறுகின்ற பயன்களைப் பற்றியும் விரிவாகத் தந்திருக்கிறோம். கடைசியாக, ஆசனத்தை எண்ணிக்கை மூலம் செய்கிற அமைப்பு முறையையும் குறித்திருக்கிறோம். ஆகவே, எண்ணிக்கை முறையைப் பின்பற்றும்பொழுது ஆசனத்திற்குரிய செயல் முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இனி, ஆசனத்தின் பிரிவு வகைகளைக் காண்போம். 1. உட்கார்ந்து கொண்டு செய்யும் ஆசனங்கள். 2. மல்லாந்து படுத்துக்கொண்டுசெய்யும் ஆசனங்கள். 3. குப்புறப் படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள் 4. நின்றுகொண்டு செய்யும் ஆசனங்கள். TTS TTS TTTT TSTST STTKZ STTTTS S S S S S S S S S S S S