பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பயன்கள்: மலச்சிக்கல் தீர்கிறது. வயிற்றின் உள் உறுப்புக்கள் வலிமை பெற்று, ஒழுங்குற செயல்படுகின்றன. பத்மாசனத்தில் பெறும் எல்லாப் பயன்களும் இதில் உண்டு. எண்ணிக்கை 1. பத்மாசனத்தில் இருக்கவும் கைகளைப் பின்புறமாகக் கட்டி அல்லது கட்டை விரல்களைப் பிடித்தவாறு இருக்கவும். 2. முன்புறமாகக் குனிந்து தரையைத் தொடவும். பத்மாசன இருக்கைக்கு மீண்டும் வரவும். 6. வஜ்ராசனம் பெயர் விளக்கம்: வஜ்ரம் என்ற வடமொழிச்சொல்லுக்கு வைரம் என்றும், திண்மை நிறைந்தது என்ற பொருளும் உண்டு. இந்த வஜ்ராசனம், அதன் பிரிவான சுப்த வஜ்ராசனம், எல்லாம் மிகவும் கடினமான பயிற்சிகள் என்பதுடன், உடலை வைரம் போன்ற தன்மையில் உருவாக்கும் என்றும் நாம் கொள்ளலாம். வஜ்ராசனம் முழங் காலுக்குரிய பயிற்சியாகும். செய் முறை: இந்த ஆசனத்திற்குரிய விரிப்பானது மெத்தை போன்ற அல்லது மென்மையானதாக இருக்க வேண்டும். ஏனெனில், முழங்கால் நன்கு ஊன்றி இவ்வாசனம் செய்ய நேர்வதால், உறுத்தல் இருக்கும். வேதனைமிகும். ஆகவே, பதமான ஒரு விரிப்பு முதலில் தேவை. கால்களை விறைப்பாக நீட்டி அமர்ந்து, முதலில் ஒரு காலை மடித்து அந்தக் காலின் குதிகால் பின் புறத்தைத் (Buttock) தொடுவது போலவும், தோள்களுக்கு நேராக இருப்பதுபோலவும், அதேபோல மறு காலையும் மடித்து முன்போல வைக்கவும்.