பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏅ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 7. சுப்த வஜ்ராசனம் பெயர் விளக்கம்: வஜ்ரம் என்பது இந்திரலோகத்தின் அதிபதியான இந்திரனின் ஆயுதம் என்று குறிப்பிடுகின்றார் கள். இதை வைர நிலை ஆசனம் என்றும் ஒரு சிலர் குறிப்பிடு கிறார்கள். ஆசனம் செய்கிறபோது, உடல் முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் வைரத்திற் குரிய முப்பட்டைபோல உடல் தோற்றமளிப்பதும், இந்தப் பெயரமைவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சுப்த வஜ்ராசனம் என்பது, வஜ்ராசனத்தின் முற்றிய அதாவது முதிர்ந்த வகையாகும். சுப்த எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறக்கம் என்பது பொருளாகும். இது வஜ்ராசன இருக்கையிலிருந்து தூங்கும் பாவனையில் அமைந்திருக்கும் گام تحصیه பயிற்சி முறையாகும். つ一\覧。 இருக்கையில் முதலில் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.