பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கைகளை விடுவிக்குமுன், கால்களை விடுவித்துக் கொள்ள முயற்சித்தால், கணுக்கால்கள் பிசகிக்கொள்ள ஆேகிடும். கஜராசனத்தில் விரும்பிய நேரம்வரை இருக்கலாம் ஆனா கய்த வஜ்ராசன இருக்கையில் 3 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடா என்றும் சிலர் கூறுகின்றார்கள். பயன்க. டுப்பெலும்புகளுக்கும், இடுப்புத்தசைப் பகுதிகளுக்கும் பிமை உண்டாகிறது. வயிற்றுத் தசைகள் வலிமை அடை எறன. மலச்சிக்கல் தீர்கிறது. கால்கள், தொடைத் த ைகள், மற்றும் நரம்புகள் மேலும் வளம் பெறுகின்றன. முதுகெலும்பில் தோன்றுகின்ற சில நலிவுகள் வேதனைகள் தீர்கின்றன. எண்ணிக்கை 1. வஜ்ராசனத்தில் இருக்கவும், தோள்களுக்கு ஆதரவாகக் கைகள் இருக்க, பின்புறமாகச் சாய்ந்து, கைகளைப் பின்புறம் வைத்திருக்கவும். 2. வஜ்ராசனத்தின் நிலைக்கு வரவும் 8. பச்சி மோட்டாசனம் பெயர் விளக்கம்: பச்சிமோட்டாசனம் என்பது, பின்புறத் தசைகள் அனைத்தையும் முன்புறமாக வளைத்து, மேற்கொள்கின்ற இருக்கை என்ற அர்த்தத்தில் அமைந்திருக்கிறது. பச்சி மோட்டாசனம் என்றாலே, கால் நீட்டியிருத்தல் என்றே சிலர் பொருள் கூறுகின்றார்கள். செயல்முறை: விரிப்பின்மீது, கால்களை நீட்டி, தலை, முதுகு எல்லாம் நேரே இருப்பதுபோல நிமிர்ந்து உட்காரவும் முழங்கால் இரண்டும் இணைந்தாற் போலவே இருக்க வேண்டும். -