பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கால்களின் முன் பாதங்கள் (Toe) பின்புறம் நோக்கி இருப்பதுபோல் வைத்துப் படுத்திருக்க வேண்டும். அதே சமயத்தில், நெற்றி மோவாய் (Chin) தரையைத் தொட்டுக் கொண்டிருப்பதுபோல் வைத்து, உடல் உறுப்புக்களைத் தளத்தி நிலையில் (Relax) இருத்தியிருக்க வேண்டும். பிறகு, தலை, மார்புப் பகுதியை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி, மு லும்பினை பின் நோக்கி வளைக்க வேண்டும். . நேரத்தில், உடலைத் துள்ளவிட்டோ அல்லது ஆட்டி சத்தோ உடலை உயர்த்தக்கூடாது. சிறிது சிறித் க, மேல் நோக்கி உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும். என்றாலும் இடுப்புப் பகுதி விரிப்பிலே தான் இருக்க வேண்டும். முன் பாதங்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். படத்தில் உள்ளது போல் நிமிர்ந்து 10 வினாடி நேரம் இருக்கலாம். - பிறகு, மெதுவாக, கை அழுத்தத்தைக் (Pressure) குறைத்து, மெதுவாக முன்பு இருந்த நிலையில் முன் பகுதி உடலைக் கீழாகக் கொண்டு வரவும். பிறகு மூச்சை வெளியே விடவும். இதை தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். எண்ணிக்கை 1. குப்புறப்படுத்து, கைகளை ஊன்றி, முன்பு விளக்கியதுபோல நிமிர்ந்து நிற்கவும். - 2. குப்புறப் படுத்திருந்த நிலைக்கு வரவும். பயன்கள்: முதுகெலும்பானது இயல்பாக வளைந்து நெகிழுந்தன்மை பெறுகிறது. முதுகெலும்புத் தொடரிலிருந்து வருகின்ற31 இணைநரம்புகள் வலிமை பெறுகின்றன. அதிக உழைப்பினால், வேலையில் பெறுகின்ற முதுகு வலியை இது