பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 85 நுரையீரலுக்கு நலம் தரும் சிறந்த ஆசனமாகவும் இது அமைகின்றது. இதே அடிப்படையில் அமைந்ததுதான் அர்த்த சலபாசனப் பயிற்சியும். 20. அர்த்த சலபாசனம் பெயர் விளக்கம்: அர்த்த என்றால் பாதி என்று பொருள் தரும் சமஸ்கிருதச் சொல் மூலம், அர்த்த சலபாசனம் பிறந்திருக்கிறது. தோற்றத்தைக் குறிப்பது > > ~~ காலைத் தூக்கிய ஆசன グー இதிை: முறையிலிருந்து, ஒரு б9, ПП 60) 60 உயர்த்திச் செய்யும் ஆசனமாக இது அமைந்திருக்கிறது. செயல் முறை: படுக்கும் முறை சலபாசனத்திற்கு ஏற்றாற்போல்தான், ஆனால், அதில் இரண்டு கால்களையும் உயரே உயர்த்துகிறோம். இதில் ஒரு கால் கீழே தரையுடன் தொடர்பு கொண்டிருக்க, மற்றொரு காலை மட்டுமே உயர்த்திச் செய்கின்ற ஆசன அமைப்பாகும். மூச்சை இழுத்துக்கொண்டு, ஒரு காலை மட்டும் உயர்த்தவும், சற்று நேர ஓய்விற்குப் பிறகு மறுகாலினை உயர்த்திச் செய்யவும். எண்ணிக்கையும் பயன்களும் சலபாசனத்திற்கு உள்ளதேதான். 21. உஸ்த்ராசனம் பெயர் விளக்கம்: உஸ்த்ரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு, ஒட்டகம் என்பது பொருளாகும்.