பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 89 23. பாதஹஸ்தாசனம் பெயர் விளக்கம்: பாதஹஸ்தா சனம் என்ற சொல்லை நாம் பிரித்தால், பாதம் +ஹஸ்தம்+ஆசனம் என்று மூன்றாகப் பிரியும். பாதம் என்றால் கால்கள், ஹஸ்தம் என்றால் கைகள். ஆசனம் என்றால் இருக்கும் நிலையமைப்பு. கால்களுக்கும் கைகளுக்கும் ஒரு _ இணைப்பினை உண்டாக்கும் இருக்கை என்பதே இதன் அடிப்படை அமைப்பாகும். இதனை நின்றுகொண்டே செய்யும் பச்சிமோட்டாசனம் என்றும் கூறுவதுண்டு. செயல் முறை:உடலை விறைப்பாக வைத்து மார்பினை உயர்த்தி கால்களை சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்க வேண்டும். தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்தி இடுப்பை முன்புறமாக வளைத்து, முன் பாதங்களைத் தொடுவதற்காகக் குனிய வேண்டும். குனிந்து, கட்டை விரல்களையும் பிடித்துக் கொள்வதோடல்லாமல், மேலும் குனிய வேண்டும். இரண்டு கைகளுக்கிடையிலும் முகம் மேலும் தாழ்ந்து குனிந்து, முழங்கால்களை மடக்காமல் முகமானது முழங் கால்களைத் தொடுவதுபோல வைக்க வேண்டும். குறைந்தது 5 முதல் 10 வினாடிகள் அப்படியே நிற்கலாம். மீண்டும் கைகளை உயர்த்தும்போது, காதின் தொடர்பு அகற்றாமலேயே கைகளை உயர்த்த வேண்டும்.