பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா செயல் முறை: இதனை உட்கார்ந்து கொண்டும் செய்யலாம். நின்று கொண்டும் செய்யலாம் என்றும் கூ ஆவார்கள். ஆனால், நின்று கொண்டு செய்யும் கையில்தான் நல்ல பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள். கல்களை சுமார் 18 அங்குலம் இடைவெளி விழுமாறு, அகலக்கி (பிரித்து) நிற்கவும். படத்தில் உள்ளது போல, இடுப்பின் மே உடல் பாகத்தை சற்று முன் சரிந்த மாதிரி வைத்து நிற்க கைகளை தாடையின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். தோள் பகுதிகளும், கழுத்தும், உறுதியாகவும் சற்று அழுத்தமாகவும் இருப்பதற்கு, இவ்வாறு தொடையில் ஊன்றியிருக்கும் கைகள் பக்க பலமாக இருக்க வேண்டும். இப்பொழுது, மூச்சை நன்றாக, முடிந்தவரை உள்ளிருந்து வெளியேற்றிட வேண்டும் (Exhale), இந்த நிலையில், இடுப்பின் மேல் பகுதியை (Trunk) மேலே உயர்த்திவிட்டு, வயிற்றுப் பகுதிகளை உள்நோக்கி இழுக்க வேண்டும். - - மூச்சை உள் இழுக்கும்போது விரியும் மார்பினைப் போல, இப்பொழுது (மூச்சை இழுக்காமல்) மார்பையும் உதரவிதானத்தையும் நிமிர்த்தவும். பிறகு, மூச்சை உள்ளே இழுக்கும்போதுதான், மெதுவாக வயிற்றுப் பகுதியை வெளியே விடவும். ஆக இந்த ஆசனத்தைக் கீழ்க்காணும் வகையில் எண்ணிக்கை முறையில் செய்யலாம். 1. தோள்களை, கழுத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு, கைகளை தொடையில் ஊன்றிக் கொண்டு நிற்பது.