பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அசையாமல் நேரே இருக்கவேண்டும். மேலும், இடுப்பையோ முழங்காலையோ வளைக்கக்கூடாது. இந்த ஆசனம் முடிந்த பிறகு, இடது காலை நீட்டி, இடது கையால் தொடவும். எண்ணிக்கை முறை 2. வலது க நேர்க் கோண அளவில் நீட்டவும். 3. வலது கையால் வலது கால் கட்டை விர லைத் தொடவும். 4. முதல் எண்ணிக்கை போல நிமிர்ந்து நிற்கவும். பயன்கள்: இவ்வாறு ஒரு காலால் நிற்பதால் உடலுக்கு, சமநிலை கிடைக்கிறது. வயிற்றுத் தசைகள் வலிமை பெறுகின்றன. கால்களுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மை கிடைக்கிறது. ஆழ்ந்த சுவாசத்தை நுரையீரல் பெற்று நலமுடன் பணியாற்றுகிறது. 28. திரிகோணாசனம் பெயர் விளக்கம்: திரிகோணம் என்றால் மூன்று கோணங்கள் என்று பொருளாகும். இந்த ஆசனத்தைச் செய்பவர், ஆசனத்தின் முடிவில். முக்கோண வடிவில் நிற்கிறார் என்பதனைக் குறிக்கும் வகையில், இது இப்பெயர் பெற்றிருக்கிறது. - _ \ --- -