பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அங்காடிப் பேச்சு

பாண்டி நாட்டுக்குத் தலைநகரம் மதுரை. அங்கே விக்கிப் நாட்டினரும் வந்து கூடிப் பாண்டி நாட்டுப் பொருள்களே வாங்கிச் சென்ருர்களாம். கடல் கடந்து வந்த யவனர்கள் பலர் அங்கே வாழ்ந் தார்கள். அவர்களுக்குத் தனி வீதியே இருந்ததாம்.

அதற்கு, யவனச் சேரி” என்று பெயர்.

பகற்காலத்தில் பண்டங்களே விற்பனை செய்யும் கடை வீதிகளும் இரவிலே பண்டங்களை விற்கும் இடங்களும் தனித்தனியே இருந்தனவாம். பகலில் வியாபாரம் நடைபெறும் இடத்திற்கு, ந்ோள் அங்காடி’ என்றும், இரவுக் கடைக்ளுக்கு, அல்லங்காடி என்றும் பெயர்கள் இருந்தன். சென்&னயில்கூட மாலேக்

கடை வீதி (Evening Bazaar) இருக்கிறதல்லவா? :

அங்காடிகளில் இன்ன பண்டம் விற்கப்படும் என்பதை நெடுந்துாரத்திலிருந்தே தெரிந்துகொள்ள லாம். பகலில் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு வகையான கொடியை உயர்த்தி இருப்பார்கள். அந்தக் கெர்டியைக் கொண்டே இன்ன பண்டம் அங்கே விற்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள லாம். இரவு நேரங்களில் அல்லங்காடியில் விளக் கில்ை இந்த விளம்பரத்தைச் செய்வார்களாம். -

х சிலப்பதிகாரத்திலும் மதுரைக் காஞ்சியிலும் மதுரைக் கடைவீதியின் சிறப்பு விரிவாகச் சொல்லப்