பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காடி பேச்சு • 99

ஆகவே, எண்ணி அளத்தல், நீட்டி அளத்தல், பெய்து அளத்தல், தேங்க முகந்து அள்த்தல், சார்த்தி அளத்தல், தெறித்து அளத்தல், நிறுத்து அளத்தல்” என்ற ஏழு வகையான அள்வுகளைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள். இந்த அளவைகளில் அங் கrடிப்பேச்சில் அதிகமாக வழங்கிவந்தவை மூன்று என்று தெரிய வருகிறது. எண்ணல் அளவை, நிறுத்தல், அளவை, தேங்க முகந்தளத்தல்' என்னும் இம் மூன்றையும் எண், நிறை, அளவு என்று அடிக்கடி தொல்காப்பியர் குறிப்பிடுகிறர். அங்காடிப் பேச் சிலே കിങ്ങഥ பெறும் இந்த மூன்றைப் பற்றியும் அவற்றின் வகைகளைப்பற்றியும் பல பழஞ் செய்தி

களை எழுத்ததிகாரத்திலிருந்து தெரிந்துகொள்ள லாம்: - *