பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை

இதுகாறும் தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் உள்ள சூத்திரங்களின் மூலமாகப் பழந்தமிழர் வாழ்க்கையைப் பற்றியும், அவர்களுடைய கருத்து, வழக்கம் முதலியவற்றைப் பற்றியும் அறிந்துகொள்வதற். குரிய செய்திகள் இன்னவை என்று ஒருவாறு ஆராய்ந் தோம். இனி அந்நூலில் கூறியுள்ள இலக்கணச் செய்தி களில் முக்கியமானவற்றை அதில் உள்ள முறைப்படியே பார்க்கலாம்.

தொல்காப்பியத்தின் தொடக்கத்தில் தொல்காப்பிய ரோடு தோழமை பூண்டு கல்வி கற்ற பனம்பாரனர் என் பவர் இயற்றியதாகச் சொல்லும் சிறப்புப்பரயிாம் ஒன்று இருக்கிறது. அதல்ை தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்தில் இயற்றப்பட்டதென்று தெரிய வருகிறது. தொல்காப்பிய முனிவர் தவவிரதமுடையவர். சிலர் அவரைச் சைனரென்று சொல்வர்.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுப்பையுடையது தொல்காப்பியம். எழுத்தைப் பற்றிய இலக்கணச் செய்திகளைச் சொல்வது எழுத்ததிகாரம். - .

இந்த அதிகாரத்தில் ஒன்பது இயல்களாகிய சிறு பிரிவுகள் இருக்கின்றன: எழுத்துக்களைப் பற்றிய பொது இலக்கணத்தைச் சொல்லும் பிரிவு முதலில் இருக்கிறது. இதற்கு, நூல் மரபு என்று பெயர். இதில் உள்ள செய்திகள் இந்த அதிகாரத்துக்கு.