பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 26 பயப்படாதீர்கள்

தோன்றுமாம். (உ-ம்) உழக்கே யாழாக்கு, கழஞ்சே குன்றுமணி, ஒன்றேகால். இவற்றுக்கு உழக்கும் ஆழாக்கு மாகிய அளவு, கழஞ்சும் குன்றுமணியுமாகிய எடை ஒன்றும் காலும், என்று பொருள் கொள்ளவேண்டும். அேரை’ என்பது வந்தால் ஏகாரம் வராது. (உ-ம்) உழக்கரை-ஒன்றரை உழக்கு, குறை என்ற சொல்? சொச்சத்தைக் குறிப்பது. காணியும் குறையும் என்ற பொருளில், காணிக்குறை’ என்பது வரும். கலம்,பனே, கா, என்ற சொற்கள் சம்பந்தமான இலக்கணங்கள் சில: சூத்திரங்களில் உள்ளன. அளவுக்கும் நிறைக்கும் உரிய பெயர்கள், க, ச, த, ப, ந, ம, வ, அ, உ’ என்ற ஒன்பது எழுத்துக்களேயே முதலில் பெறுமென்று ஒரு சூத்திரம் சொல்கிறது.

ஆறவது, உருபியல் வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொல்லோடு சேரும் இலக்கணத்தைச் சொல்வது. இதில் உள்ள சூத்திரங்கள்.80.

இன்ன இன்ன உருபுகளுக்கு இன்ன இன்ன சாரி யை வரும் என்று விரிவாகச் சொல்லும்பகுதி இது. அ, ஆ’ என்ற எழுத்துக்களே இறுதியாகக்கொண்ட மரப் பெயர்களுக்கு இலக்கணம் வகுக்கும் சூத்திரம் ஒன்று உண்டு. விள, பலா முதலிய மாப்பெயர்களின் முடிபை இந்தச் சூத்திரத்தால் உணரலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஏன்னும் திசைப்பெயர் சம்பந்தமான இலக்கணம் ஒரு குத்திரத்தில் வருகிறது.

  • உயிர் மயங்கியல் ஏழாவது பிரிவு, உயிரை இறுதி யில் பெற்ற மொழிகளோடு பிற மொழிகள் வந்து சேரும் இலக்கணத்தை வகுப்பது இது. உயிர் பிறவற்ருேடு கலக் கும் இலக்கணத்தைக் கூறுவது என்பது இத்தொடரின்