பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றமிழ்நாட்டு அகன்பொதியில் *

திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்

என்றும்அவண் உறைவிடமாம்; - ஆதலிளுல் அம்மலையை இறைஞ் ஏகி.’’

அகத்திய முனிவர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவரு டைய பக்தித் திறம்பற்றித் தமிழ் நாட்டில் வழங்கும் புராண வரலாறுகள் பல. திருக்குற்ருலத்தில் திரு மா8லக் குறுகச்செய்து சிவலிங்கமாக்கி வழிபட்டா ராம். அவர் பூசித்த தலங்கள் பல பல. அவர் தமிழை வளர்த்த கதையும், தலங்களே வழிபட்ட கதையும் உரைகள், புராணங்கள் இவற்றின் மூலமாகத் தெரி கின்றன. அவற்றைத் தக்க ஆதாரங்களாகக் கொள்ள முடியாது. அதனுல் அகத்தியர் என்று ஒரு வர் இந்நாட்டில் இருந்ததே. இல்லே என்று சில புதிய ஆராய்ச்சியாளர்கள் சொல்வி யிருக்கிருர்கள். to 52 காலமாக வழங்கும் நூற் செய்திகளேயும் பரம்பரை வரலாறுகளேயும் அடியோடு பயனற்றன என்று ஒதுக்கித் தள்ளுவது முறையன்று. அவ்வளவுக்கும். மூலகாரணமான உண்மையொன்று இருக்கத்தான் வேண்டும். அகத்திய முனிவர் பெயரால் வழங்கும் நிகழ்ச்சிகள் அவ்வளவும் நிகழாமல் சில மாத்திரம் நிகழ்ந்திருக்கலாம். அகத்தியர் என்ற ஒருவர் இருந் தது உண்மையே. அவர் மிக்க பெருமையும் ஆற்ற லும் உடையவராக இருந்தமையால் மக்கள் அவருக் குப் பின்னும் பெருமை அளிக்க வேண்டிப் பல பல கதைகளைக் கட்டிப் பரப்பி யிருக்கலாம்.

இவ்வளவு கதைகளுக்குள்ளும், அகத்தியர் ஒரு வர் மகா பராக்கிரமசாலியாகவும் மேதாவியாகவும் இருந்தார் என்ற உண்மைதான் விளங்குகின்றது.