பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 岔岳

தொடங்குகின்றது. நல்லவழியில் சிந்திக்கத் தொடங்கு கின்றார்.

இருள் தருமா இவ்வுலகில் தோன்றிய உடல் ஒரு குடி போல் தோன்றுகின்றது. இக்குடிசையில் எலும்புகள் தூண்களாக நடப் பெற்று இடை இடையே மாமிசத் தாலான சுவர்கள் வைக்கப் பெற்றுள்ளன. உரோமங்கள் மேலே வேயப் பெற்ற இக்குடிசைக்கு ஒன்பது வாயில்கள் உள்ளன. இக்குடிசையில் ஆன்மா வாழ்கின்றது. ஆன்மா குடிசையை விட்டு வெளிக் கிளம்பும் காலமே மரணம் ஆகும். இங்ங்னம் மரணம் நேர்ந்த பிறகு இவ்வாண்மா அடைய வேண்டிய இடம் எம்பெருமானின் திருவடிகள் என்ற எண்ணம் ஆழ்வார் சிந்தையில் எழுகின்றது (9). இதனைத் தவிர யம பயமும் அடிக்கடி இவர் சிந்தையில் எழுகின்றது. நமன்தமர் செய்யும் வேதனைக் கொடுங்கி நடுங்கினேன். (3) என்கின்றார். எமபடர்கள் செய்யும் கொடுமைகளைவிட அவர்தம் சொற்கள் கூரியவை. 'கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி' என்கின்றார் (5) ஆழ்வார். பிறர் மனை நயப்பவர்களை எமபடர்கள் என்ன செய்வார்கள் என்பதை,

வம்புஉலாம் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர்பொருள் தாரம்என்று இவற்றை

நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி

எற்றிவைத்து எரிஎழு கின்ற

செம்பினால் இயன்ற பாவையை, பாவீ!

தழுவு (4)

(வம்பு - மணம்; நம்பினார் - விரும்பினவர்கள்: எற்றி - துன்பப்படுத்தி, பாவைய்ை - படிமத்தை)

Łu. 5.-5