பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

திருநீற்றை அணிந்தபோதும் நெஞ்சிற்குள்ளே

திருமாலின் அருளிச்செயல் பாட்டே கேட்கும் ஒருமனத்தில் இருகாட்சி படைத்துக் கொண்ட

ஒருமை நலப் பொதுமையதன் உணர்வு

கொண்டார்; பெருந்தன்மை இவர் கொண்ட வாழ்க்கை என்றால்

பேரன்பே இவர் காட்டும் பாச மாகும்; வருநாளின் வரலாற்றில் வாழும் நெஞ்சாய்

வாழ்கின்றார் சுப்புரெட்டி யார்என் பேனே! 7.

பரமனருட் சுடர்பாடிக் கலியன் தந்த

பாசுரத்தில் திளைத்திட்ட என்றன் ஆசான் வரலாற்றின் வழிநின்று வகுத்துத் தந்த

வளமான பயணங்கள் எல்லாம் நெஞ்சில் சுரக்கின்ற அருளாகிப் பாய்வ தாலே

சொற்றமிழின் இறைக்காட்சி உளத்தில்

தோன்றும்! வரமாக இந்நூலை ஏற்றுக் கொண்டால்

வருநாளின் பயணத்தில் இறைமை வாழ்த்தும்! ே

வளர்கின்ற ஆண்டுகளை வெல்லும் ஆர்வம்

வளமைசேர் தமிழுக்குள் வாழும் உள்ளம் தளராத தமிழ்ப்பணி பில் பொன்னி வெள்ளம்

தாமறிந்த கலைபிறர்க்குக் கூறும் வேட்கை அளப்பரிய கருத்துகளை எண்ணும் நெஞ்சம்

அன்றாடம் இறைநெறியில் வழுவாச் செம்மை உளமறிந்த ஆய்வுகளில் திளைக்கும் சீர்மை

உள்ளபடி ஐயாவை இவையே காட்டும்! 豪

பேச்சினிலே சிரிப் பிருக்கும் சிரிப்பிற் குள்ளே

பெருமைதரும் கருத்திருக்கும் கனிவி ருக்கும்

மூச்சினிலே வேங்கடவன் மணமே வீசும்

முப்போதும் இறைமறவா முழுமை தோன்றும்;