பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பரகாலன் பைந்தமிழ்

என் நெஞ்சில் உள்ளானே (6) என்றும், திருவேங்கடம் மாமலை மேயகோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே (7) என்றும் பேசி இனியராகின்றமையைக் காண முடிகின்றது.

எம் பெருமான் திறத்தை எடுத்துரைத்த ஆழ்வார் தம் குற்றங்களையெல்லாம் விரித்துக் கூறித் தம்மை ஆட் கொள்ளுமாறு வேண்டிச் சரண் புகுகின்றார். எம்பெரு மானே, உறவினர் அல்லாதாரை உறவினர்கள் என்று நம்பிக்கெட்டொழிந்தேன் (1. 9:1); அநுபவிக்கத் தகாத வற்றை அநுபவித்து எண்ணற்ற பாவங்களைச் செய்தேன் (2). பல உயிர்களைக் கொன்று பலவகைப் பாவங்களைப் பண்ணிணேன் (3). எண்ணற்ற யோனிகளில் பிறந்து இளைத்தேன்; ஒரு விதமான நற்செயல்களையும் புரிந் தேன் இலேன் (4.5). பஞ்ச பூதங்களாலான யாக்கையில் புகுந்து புலம்பித் தளர்ந்தொழிந்தேன் (6). அறியாப் பருவத்தே பல அவச் செயல்களைச் செய்து விட்டேன்; இளமைப் பரு வ த் தி ல் .ெ ப ண் டி ற் கா. க ேவ அலைந்து சதிர் கேடனானேன் (7) இங்ங்னம் பாவமே, செய்து பாவியான அடியேன் உன்னைவிட்டுத் தரிக்க மாட்டாத அன்பு பிறந்து உன்னையே அடைக்கலமாகப் பற்றிக் கொண்டேன். முன்னைத் தீவினைகளை எண்ணி என்னைக் கைவிடாது ஆட்கொள்ள வேண்டும்' என்று கூறி, பாசுரங்கள்தோறும் வந்து அடைந்தேன்; அடி யேனை ஆட்கொண்டருளே’ என்று ஒரு முறைக்கு ஒன்பது முறை பன்னியுரைக்கின்றார்.

இத்திருத்தலம்பற்றிய நான்காம் திருமொழியில் {2.1) ஆழ்வார் பகவத் விஷய அநுபவம் எல்லார்க்கும் இல்லையாயிருக்க, தமக்கு மட்டிலும் கிடைக்க வேண்டிய தற்குக் காரணம் யாது?’ என்பதை ஆராய்ந்து பேற்றுக் கும் இழவுக்கும் நெஞ்சுதான் முநலடியானது என்று