பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

வேத சொரூபி, அவரவர் வினைகேற்ற பலன்களைத் தருபவன். முனிவர்கள் நுகரும் கோதற்ற கனி போன்ற வன்: நந்தனுக்கு ஆனைக்கன்று போன்ற பிள்ளை. ஜகத் காரணபூதன் அமுதம் போன்ற இனியன் (2). தாயுருவாக வந்த பூதனையை முடித்தவன்; அசுரர்கட்கு யமன் போன்றவன்; மோகினி உருவந்தாங்கி தேவர்கட்கு அமுத ளித்தவன் (3). ஆயர்களையும் ஆநிரைகளையும் கல்மாரியி னின்றும் காத்தவன் (4). பெரிய பிராட்டிக்கு இன்பன்; பூமிப் பிராட்டிக்கு நாதன், நப்பின்னைப் பிராட்டியின் தாயகன். மற்றவர்கட்குத் துணையாயிருப்பவன்; பாண் டவது தன் (5). பாஞ்சாலியின் மானங் காத்து நூற்றுவர் மனைவிமார் தாலியை இழக்கச் செய்தவன்; பார்த்தனுக் குச் சாரதியானவன் (6). பரதாழ்வான், சத்துருக்கனாழ் வான், இளையாழ்வான், சீதாப்பிராட்டி தோத்திரம் பண்ணும் படியாக இருப்பவன்; இராவணனை முடித் தவன் (?). பிரகலாதன் பொருட்டு நரசிம்மனாக அவதரித்து இரணியனை முடித்தவன் (8). முதலையைக் கொன்று ஆனையின் துயர் தீர்த்தவன் (9). இந்தப் பெருமானைச் சேவித்த பின்னர் ஆழ்வார் திருநீர்மலை வருகின்றார்.

4. திருநீல்மலை: திருமங்கையாழ்வார் ஒரு திருமொழியில் (2.4) மங்களாசாசனம் செய்கின்றார்.

அன்றாயர் குலக்கொடியோடு அணிமா மலர்

மங்கையோடு அன்பளவி அவுணர்க்கு

என்றானும் இரக்கமி லாதவனுக்கு

உறையும்.இட மாவது இரும்பொழில்சூழ்

6. நீர்மலை: பல்லாவரம் என்ற மின் இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கல் தொலை இலுள்ளது எம்பெருமான்: நீர்வண்ணன். நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக ம்ண்ட் லம், தாயார்: அணிமாமலர் மங்கை நாச்சியார்.