பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 91

இங்ங்னம் திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பற்றிப் பேசி மகிழும் ஒரு பாசுரத்தை ஈண்டுக் காட்டு வேன்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய்

உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து

விளையாட வவ்லானை வரைமீகானில் தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்

தவநெறிக்கோர் பெருநெறியை வையங் காக்கும் கடும்பரிமேல் கற்கியை நான் கண்டு கொண்டேன். கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசய ಸ್ಧ!

{2.5:

(உரு-வடிவம்; உய்ய-பிழைக்க: வித்தகன் ஆச்சரியமானவன்; வரைமீகான்-மலைமீதுள்ள காடு; தடம்-குளம்; கருமுகில்-காளமேகம்: நெறி-வழி; கடி-மனம்1

என்பது பாசுரம். இதில் அடங்கியுள்ள வைணவ தத்து வத்தை விரிவஞ்சி விளக்க முடியவில்லை." ஒவ்வொரு பாசுரமும் எம்பெருமானைக்

'கடிபொழில்சூழ் கடல்மல்லைத்

தலசய னத்தே'

என்று முடிகின்றது.

கண்ணனாக அவதரித்து நிறைவேற்றின திருவிளை யாடல்களே அதிகமாக இத்தலத்து எம்பெருமானின் செயல்களாகப் பேசுகின்றார் ஆழ்வார். ஆழ்கடலில் தோன்றின அமுதத்திற்கு நிகரான எம்பெருமான் குதிரை

10 தொ. கா. தி. பக். 221-223 கண்டு தெளிக.