பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 97

இனி, இங்கு ஒரு பாசுரத்தைக் காட்டுவேன்.

திவளும்வெண் மதிபோல் திருமுகத்(து) அரிவை

செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும் நின்’ ஆகத்(து) இருப்பது அறிந்து,

ஆகிலும் ஆசைவி டாளால்: குவளை அம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு:நின் தாள் நய்ந் திருந்த இவளையும் மனத்தால் என்நினைந்(து) இருந்தாய்

இடவெந்தை எந்தை பிரானே (1)

Iதிவளும்-பிரகாசிக்கின்ற; மதி-சந்திரன்; திரு

முகம்-அழகிய முகம்; அரிவை-இளம் பருவ முள்ள பெண்; அவள் பெரிய பிராட்டியார்; ஆகம்-மார்பு; குவளை-நீலோற்பலம்; பாவைபதுமை !

என்பது ஆழ்வார் பாசுரம், இடவெந்தை பிரானே! உன் மீது என் மகள் ஆசை கொள்ளுதல் கூடாது. நீயோ பாற்கடலில் பிறந்த அழகிய திருமகளை ஒரு நொடிப் பொழுதும் விடாது திருமார்பில் வைத்துக் கொண்டுள் ளாய். இதனை அறிந்திருந்தும் என்மகள் உன்மீது காதல் கொண்டுள்ளான்; கொண்ட ஆசையைக் கைவிடுவாளாக வும் இல்லை. தன்னுடைய தனிச் சிறப்பினை எண்ணி நீ திருமகளிடத்தில் காட்டும் அன்பைவிட தன்னிடத்தில் தான் அதிக அன்பைக் காட்டுவாய் என்று எண்ணங் கொண்டிருக்கின்றாள். யார் எது விரும்பினாலும் உனது திருவுள்ளம் உவந்தாலன்றிப் பலன் கிடைக்க மாட்டா தாகையால் என் மகள் விஷயத்தில் நீ என்ன செய்யத் திருவுள்ளம் கொண்டுள்ளாய்? அடியேன் அறியச் சொல்லியருள்க' என்று வேண்டுகின்றாள்.

ப. க.-7