பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登藻 பரகாலன் பைந்தமிழ்

இப்பாசுரத்தின் நயத்தைச் சிந்திப்போம். சிசுக் களுக்குத் தாயின் முலைபோல் அடியவர்கட்கு எம்பெருமா ட்ைய திருவடியே கதியாதலின் 'நின்தாள் நயந்திருந்த னை என்கின்றார். "சொரூப ஞானம் இல்லாத காரணத்தால், திருமகள் நின் திருமார்பை விரும்பினாள்; என்மகள் தற்குடிப் பிறந்து நல்லறிவு வாய்க்கப் பெற்றவ நின் திருவடியையே விரும்புகின்றாள்' என்ற சமத்காரம் தோன் தப் பேசுகின்றாள் தாய். உன் மனத் தால் என் நினைந்திருந்தாய்?-இஃது எல்லா சாத்திரங் களின் போருளையும் அடக்கிக் கொண்டுள்ள வினா சேதுநருடைய செயல் தொகுதிகள் யாவும் சாதனம் அன்று எம்பெருமானுடைய வுள்ளத்தில் பிறக்கும் இரக்கமே பலனைப் பெறுவிக்க வல்லது என்ற தொனிப் பொருள் இதில் அடங்கிக் கிடக்கின்றது".இத்தலத்து எம்பெருமான் தனது தேவியை இடப்பக்கத்தில் தாங்கிக் கொண்டிருத்தலால், இத்தலம் திரு இட எந்தை (திருவினை இடப் பக்கத்துக் கொண்டிருக்கும் எந்தை) என்ற திருநாமத்தால் வழங்இ வருகின்றது என்பது ஈண்டு அறியத்தக்கது.

தமிழில் அகப்பொருள் துறைகளில் வரும் செய்தி. களை எல்லாம் பொருத்தி நாயக-நாயகி பாவனையாக வரும் பா சு ரங்க ைள ச் சுவைமிக்கதாக்கியுள்ளனர் ஆழ்வார் பெருமக்கள். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு ஏற்படும் உடல் நிலைகளை யெல்லாம். எம்பெருமான்மீது ஆராக்காதல் கொண் டிருக்கும் ஆழ்வார் நாயகிக்கும் ஏற்படுவதாகச் சொல்லுவது. கவிதை மரபாகி விட்டது. இதுபற்றிய கருத்துகள் வாவும் பிறிதோர் இடத்தில் விளக்கப் பெற்றுள்ளது.

16. அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்பது மணிவாசகரின் திருவாக்கு (சிவபுராணம் அடி. 48),