பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 119

蓝器。

திருத்தண்கா : இத்தலத்து எம்பெருமான்

மீது திருமங்கையாழ்வார்,

என்னை ஆளுடை ஈசனை, எம்பிரான்

தன்னை, யாம்சென்று கண்டும்தண் காவிலே

(10.1:2)

[ஆளுடை-அடிமைகொண்டர்

என்று தானானதன்மையில் மங்களாசாசனம் செய்கின் றார். இவர் மங்களாசாசனம் செய்த மற்றொரு பாசுரம் தாய்ப்பாசுரமாக அமைந்துள்ளது.

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை, மூவா

மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற

அளப்பரிய ஆரமுதை, அரங்கம் மேய

அந்தணனை, அந்தணர்தம் சிந்தை யானை

விளக்கொளியை, மரகதத்தைத் திருத்தண் காவில்

16.

வெஃகாவில் திருமாலைப் பாடக கேட்டு

திருத்தண்கா : இந்தத் திவ்விய தேசம் சின்ன காஞ்சிபுரத்தில் துப்புல்” என்ற பகுதியில் உள்ளது. வேதாந்த தேசிகர் அவதரித்த இடமும் இதுவ்ே. குளிர்ந்த சோலைகளையுட்ையதால் இத்தலம் தண்கா’ என்று திருநாமம் பெற்றது போலும் எம்பெருமான் : தீபப்பிரகாசர் (விளக்கொளிப் பெரும்ாள்); நின்ற திருக்கோலம்: மேற்கு நோக்கிய திருமுக மண்டலம், தாயார் : மரகதவல்லித் தாயார். இத்தலத்து எம்பெருமான் பண்டைக்காலத்தில் சயனத் திருக்கோலமாக எழுந்தருளியிருந்ததாகப் பெரிய வாச்சான்

ள்ளை வியாக்கியானத்தாலும், அரும்பத உரை யினாலும் மற்றும் சில குறிப்புகளாலும், அறியக் கிடக்கின்றது. பெரி. திரு. 10.1:2 திருநெடுந் 14.