பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலப் பயணம் 157

திரைகொணர்ந்தணையு செழுததி வயல்புகு

திருவயிந்திர புரமே (8)

(தடம்.ஆர்-குளங்கள் நிறைந்த; மதகரி-மத யானைகள்; மருப்பு-தந்தம்; மலைவளர்-மலையில் வளரும்; திரை-அலை; உந்தி-தள்ளி; அணைசேருதின்ற; செழுநதி-அழகிய ஆறு)

என்பது கருடநதியின் காட்சியைக் காட்டு பாசுரப் பகுதி கருட நதி வெள்ளமாய்ப் பெருகி வருங்கால் யானைத் தந்தங்களையும், அகில் மரங்களையும், மற்றும் பல பல மணிகளையும் கொழித்துக் கொண்டு வருகின்றது. இந்த ஆறு கழனிகளில் கால்களாகப் பாய்ந்து இதனை வரை மிக்கதாக்குகின்றது. இந்த ஆற்றில் மீன்கள் துள்ளிவிளை யாடுகின்றன.ஆறுபாயும் வெற்றிலைக் கொடிக்கால்களில் கனுக்கள்தோறும் வெற்றிலைக் கொடிகள் கிளைக் கின்றன. சோலைகளிலுள்ள பாக்குமரங்கள் இளங்குருத்து களை விடுங்கால் சோலை முழுதும் நறுமணம் வீசு கின்றது (9).

தலத்து எம்பெருமான் : எம்பெருமானின் நிலை பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அச்சை என்ற ஐந்தாக இருப்பினும் இந்த ஐந்து நிலைகளிலுள்ள எம்பெருமான்கள் வேறுபாடற்ற ஒருவரே என்பது வைணவதத்துவம். இதனை,

மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு

உண்டுஉமிழ்ந்(து) அளந்தானை

தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச, தண்

திருவயிந்திர புரத்து

மேவு சோதியை (20)

Iதானவர் - அரக்கர்கள்; மேவு - ம்ெ யுள்ள சோதி - பரஞ்சோதி}